*⭕வரலாற்றில் இன்று__________*

*⭕வரலாற்றில் இன்று__________*

*1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.*

*1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.*

*1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.*

*1945 – இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.*

*1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.*

*1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.*

*1962 – கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.*

*1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.*

*1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.*

*1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.*

*1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.*

*1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.*

*1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.*

*1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.*

*1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.*

*1996 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.*

*2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.*

*2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.*

*2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.*

*2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.*

Recommended For You

About the Author: Editor Elukainews