மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் பற்றி எரிந்த பாடசாலை கட்டிடம்

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த  தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் பாடசாலை சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews