காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது உயிர்த ஞாயிறு தாக்குதல் ஸாரானின்  ஆதரவாளர்களா என்ற சந்தேகத்தில் வீடு வீடாக சென்று; பொலிசார் அதி தீவிர விசாரணை —
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள ஸாரான் காசிம் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டர்சைக்கிள் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிசார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரியான ஸாரான் காசிமினைச் சேர்ந்த ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் ஒன்று கூடிவருவதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது

இதணையடுத்து சம்பவதினமான நேற்று இரவு குறித்த வீட்டில்  பலர் ஒன்று கூடியநிலையில் குறித்த வீட்டை சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிசாருடன் பலனாய்வு பிரிவினரும் இணைந்து குறித்த வடீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்

இதன் போது அங்கு போட்டிக்கு (காட்ஸ்) 304 கடதாசி விளையாடிக் கொண்டிருந்த உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த ஸாரான் காசிமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கி கூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த 4 பேர் உட்பட 30 பேரை கைது செய்தனர்

இதனையடுத்து விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார்; விசேட பொலிசாரை வரவழைக்கப்பட்டு பல பிரிவுகளாக பிரிந்து காலை 8 மணி தொடக்கம் கைது செய்யப்பட்டவர்களின்; வீடுகளுக்கு சென்று அவர்களின் வீடுகளை சோதனையிட்டு விசாரணைகளை மேற்கொண்டர்

இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தேசிய புலனாய்வு பிரிவினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர்  சென்று காசிமின் அடிப்படைவாத கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா?  என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுதுடன்  அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலை பேசிகளை பரிசோதனை செய்வதற்காக சைவர்கிரைம் பிரிவினரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக ஒன்று கூடிய வீட்டிற்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடையவியல் பிரிவு பொலிசார் மேப்பநாய்களுடன் சென்று பெரும் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து கைது செய்யப்பட்டவர்களின் 23 மோட்டர்சைக்கிள்கள் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டனர்

இந்த சம்பவத்தையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரபு;பு ஏற்பட்டுள்துடன் கைது செய்யப்பட்டவர்கள் கடந்த சில காலங்களாக அங்கு இரவில் ஒன்று கூடி கடதாசி கூட்டம் போட்டிக்கு விளையாடி வருவதாகுவும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கி வருதாகவும் அவர்களிடம் பொலிசார் மேற் கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருவதுடன் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று கூடி காத்திருப்பமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews