நிகழ்நிலை காப்புச்சட்டம் தொடர்பாக கருத்தமர்வு

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பிரஜாஅபிலாச வலையமைப்பினால் கருத்தமர்வு ஒன்று நேற்றுமுன்தினம் 28.02.2024 வியாழன் சிலாபம் நைனாமடம் சிந்தனை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

பிரஜா அபிலாச வலையமைப்பின் இணைப்பாளர் பிரான்சிஸ் பிரியங்க கொஸ்தா தலைமையில் ஆரம்பமான குறித்த கருத்தமர்வில் இலங்கையின் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை, பொலநறுவை,குருநாகல்,மொனறகலை,,மாத்தறை,காலி,களுத்துறை,கொழும்பு,கம்பகா(நீர்கொழும்பு) ,புத்தளம் உட்பட 16மாவட்டங்களை சேர்ந்த 40பேருக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நிகழ் நிலை காப்பு சட்டம் தொடர்பாக சட்டத்தரணி திருமதி ரவீந்திரா விளக்க உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews