காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ டொலர் திரட்டும் இலங்கை அரசாங்கம்

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்தை உருவாக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு இதற்கு பங்களிக்குமாறும் அமைச்சுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பொதுமக்களும் காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்திற்கு தமது பங்களிப்புக்களை வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews