திருமலையில் வெடி பொருட்கள் மீட்பு…!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில்  வெடி பொருட்களுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது டைனமைட் -03, டெட்டனேட்டர் -03, தீப்பெட்டி -02, கையடக்க தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இவ் வெடி பொருட்களை கடற்கரையில் வைத்திருந்தபோது சந்தேக நபரையும் வெடி பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews