பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் சேவை நீடிப்பு

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்குவதற்காக  அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் கடந்த வருடம்  நவம்பர் 29 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு 3 மாத காலத்துக்கு வழங்கப்பட்ட நியமனம் இம்மாதம் 29 ஆம் திகதி நிறைவடையும் நிலையிலேயே மீளவும் சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews