சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உத்தரவு..!

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews