இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்கு விஜயம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வங்கி ஊழியர்களுக்கான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோதே கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள பிராந்திய  அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். எனினும் ஊடகங்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews