ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி! 

மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம்  நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும், மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews