*முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்*

பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2018 இல் அந்த எண்ணிக்கை 328,000 ஆகக் குறைந்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டளவில் முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews