இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம், சுற்றுலாத் துறை, கலாச்சார பரிமாற்றம், கல்வி, மதம், கலாச்சார நடவடிக்கைகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் சாத்தியம் இருப்பதை அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

அதற்காக, குறைந்த கட்டண பயண மற்றும் போக்குவரத்து கட்டண முறையை அறிமுகப்படுத்துவதும், அதன்படி இலங்கையிலிருந்து பயணிகள் கப்பல்கள் மற்றும் உல்லாசக் கப்பல்கள் மூலம் தற்போது விதிக்கப்படும் deviation வரியை முறையே 5 மற்றும் 20 அமெரிக்க டொலர்களாக குறைத்தல், ஒரு பயணிக்கு 60 கிலோ வரையிலான இலவச பயணப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews