மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் இரத்தானம்!

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

சமூக செயற்பாட்டாளர் மயூரி ஜனன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கியின் வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வருகை தந்து இரத்த கொடையாளர்களிடமிருந்து வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இரத்த தானத்தினையும் மேற்கொண்டுள்ளதுடன், இரத்த கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews