*வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பித்த 7ம் ஆண்டு நினைவு நாள் -2024*

*வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பித்த 7ம் ஆண்டு நினைவு நாள் -2024*

———————————————-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் வலி நிறைந்த ஏழு ஆண்டுகளைக் கடந்து வரும் 20.02.2024 இல் எட்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது.
இந்தப் போராட்டத்தில் நாம் அனுபவித்த வலிகள், இடையூறுகள், தடைகள் ஏராளம். எனினும் இதுவரை காலமும் தாங்கள் எமக்களித்த ஆதரவும் ஊக்கமுமே எம்மை மனவலிமையுடன் போராட வைத்தன.
எனவே கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் இந்நாளை அடையாளப்படுத்தும் முகமாக ஒரு பேரணி 20.02.24 அன்று கந்தசாமி கோயில் முன்றலில் தொடங்கி கிளிநொச்சி டிப்போச்சந்தி வரை நடைபெறும். இந்தப் பேரணியில் கலந்து எமக்கு ஊக்கமளிப்பதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் எங்கள் முயற்சியிலும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

காலம்: 20/02/2024

நேரம் : காலை 9:30

இடம்: கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றல்

இப்போராட்டதில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டி நிற்கின்றோம்.

– நன்றி –

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் – வடக்கு கிழக்கு மாகாணங்கள்

Recommended For You

About the Author: Editor Elukainews