அல்லைப்பிட்டி பகுதியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்மணி மரணம்!

இன்றையதினம் அல்லைப்பிட்டி பகுதியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த 45 வயது மதிக்கத்தக்க, மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தனியார் பேருந்தில் பயணித்த குறித்த பெண், தான் இறங்கும் இடம் வந்தவேளை பேருந்து நிற்பதற்கு முன்னர் கீழே இறங்கியுள்ளார். இந்நிலையில் அவரது தலையில் அடிபட்டு மூக்கில் இருந்து இரத்தம் வந்தது.
உடனே பேருந்து சாரதி அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். வைத்தியசாலைக்கு அவரை கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews