யாழ்.வலி,வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக சாதகமான பதிலை வழங்க ஜனாதிபதி பணிப்பு!

யாழ்.வலி,வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக சாதகமான பதிலை வழங்க ஜனாதிபதி பணிப்பு!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவசாய காணிகள் விடுவிப்பு , இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆலயங்களுக்கு வழிபட அனுமதிப்பது தொடர்பிலும் ஆராய்ப்பட்டது. அதன் போதே ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிலையில் 300 ஏக்கர் விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த விடுவிப்பது குறித்து இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் வறுத்தலைவிளான், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews