சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் வவுனியா மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டில் வவுனியாவைச் சோந்த மூன்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில், தரம் 7 பிரிவில் வவுனியா அல் அக்ஸா மகாவித்தியாலய மாணவி எம்.எம்.எவ்.நகா தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்துடன், தரம் 12 மற்றும் 13 பிரிவில் வவுனியா அல் அக்ஸா மகாவித்தியாலய மாணவி என்.நசூராபேகம் இரண்டாம் இடத்தையும், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி ஏ.டேனுஜா மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews