யாழில் அதிகரித்த போதை பொருள் பாவனை

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை, கடத்தி சென்றமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews