சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து,சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் செயலாளர் நாயகம் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையானது இந்தியாவின் ஒரு பகுதி” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த சர்ச்சைக் குறிய கருத்து தொடர்பாகவே அவர் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளியிட்ட கருத்தின் ஊடாக அமைச்சர் நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மேற்கொண்ட சத்தியப் பிரமாணத்தையும் அமைச்சர் மீறியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்தால் நாட்டின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில்அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என  வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews