ஞானசாரதேரர் முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

2016ம் ஆண்டு குரலக ஆலயத்தில் தெரிவித்த கருத்துக்களிற்காக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

எட்டு வருடங்களிற்கு முன்னர் நான் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நாட்டின் முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன் என ஞானசாரதேரர் கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

எனது நடவடிக்கைகளிற்காக நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களிடம் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசாரதேரரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில்  மார்ச்28ம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு மார்ச் 30ம்திகதி  ஆலயத்தில்  ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்து சட்டமாஅதிபர் வழக்குதாக்கல் செய்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews