மேக்ஸ்வெல் சரவெடி, ரோமன் பவல் அதிரடி! விறுவிறுப்பான போட்டியின் முடிவு🔥👇🏼

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்று வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலிய அடிலைடு மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 22(19), ஜோஸ் இங்லீஷ் 4(6) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து கேப்டன் மிட்சல் மார்ச் அதிரடியாக விளையாடி 12 பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 55 பந்தில் ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தை அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் சாதனையை சமன் செய்தார்.

இறுதி வரை ஆட்டம் இழக்காத மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் 120 ரன்களும், டிம் டேவிட் 14 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் 31 ரன்களும் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிராண்டன் கிங் 5(9), ஜாஸ்டன் சார்லஸ் 24(11), நிக்கோலஸ் பூரன் 18(10), ஷாய் ஹோப் 0(2), ஷர்ஃபான் ரூதர்போர்டு 0(2) ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய நெருக்கடி உருவானது.

ஆனால் இதற்கு அடுத்து உள்ளே வந்த கேப்டன் ரோமன் பவல் மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அதிரடியாக விளையாடிய ரசல் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து கேப்டன் ரோமன் பவல் 36 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் இந்தப் போட்டியிலும் அதிரடியாக 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த மூன்று பேட்ஸ்மேன் களின் அதிரடி 200 ரன்களை கடக்க மட்டுமே உதவியது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை வென்று இருந்த ஆஸ்திரேலியா, இரண்டாவது போட்டியையும் வென்றதால் தற்பொழுது தொடரை கைப்பற்றி இருக்கிறது.

#AUSvsWI

Recommended For You

About the Author: Editor Elukainews