*⭕வரலாற்றில் இன்று_______*

*⭕வரலாற்றில் இன்று_______*

*1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.*

*1909 – ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.*

*1912 – சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்.*

*1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.*

*1921 – போல்செவிக் படைகள் சியார்சியா மீது தாக்குதலைத் தொடுத்தன.*

*1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.*

*1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.*

*1935 – ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.*

*1947 – மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.*

*1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.*

*1974 – 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார்.*

*1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.*

*2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.*

*2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணை முடிவடையும் முன்னர் அவர் இறந்தார்.*

*2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.*

*2009 – அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர்.*

*2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.*

Recommended For You

About the Author: Editor Elukainews