*⭕வரலாற்றில் இன்று__________*

*1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.*

*1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.*

*1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.*

*1946 – அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.*

*1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.*

*1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.*

*1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.*

*1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.*

*1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.*

*1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.*

*1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.*

*2005 – கனடிய அரசு ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.*

*2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்.*

Recommended For You

About the Author: Editor Elukainews