வவுனியாவை வந்தடைந்த மடு மாதாவின் திருச்சொரூப பவனி

மடு தேவாலய மாதாவுக்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது.

1924ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் அவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான நிகழ்வாகும்.

இதற்கமைய இந்த ஆண்டும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100ஆவது ஆண்டு யூபிலியை  முன்னிட்டு மடு அன்னையின் திருச்சொரூபம் மடுவிலிருந்து மன்னார் , வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறை மாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

அந்த வகையிலேயே மடு மாதாவின் திருச்சொரூபம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது. குறித்த பவனியினை வரவேற்கும் முகமாக வரவேற்பு நடனம் , வெடிகள் , பேனர்கள் , ஒளி வெளிச்சங்கள் என பல்வேறு விதங்களின் பவனிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இன்றைய திருச்சொரூப பவனியில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews