பருத்தித்துறை வைத்தியசாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபுறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் இன்று புறக்கணிப்பை மேற்கொண்டனர். 44 தொழில் சங்கங்களும் இணைந்து இந்த தொழில் சங்கப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டடம் மேற்கொள்ளப்பட்டது.

ஆயினும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு இடையூறு எதுவும் இன்றியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews