யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ள நிலையில் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் பெப்ரவரி 26ம் திகதி காலை 9 மணிக்கு வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக பதிவாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் உள்ள தாமதம் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மார்ச் மாதம் 14,15,16 நடாத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் ஜனவரி 19ம் திகதி காலை 9 மணிவரை முன்னர் விண்ணப்பம் செய்ய முடியும் என பல்கலைக்கழக பதிவாளரால் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறும் திகதி பிற்போடப்பட்டுள்ள நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு பட்டம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கான திகதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews