இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியான தகவல் –

இலங்கையின் இன்றைய வானிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மிமீக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது, பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இதேவேளை, மத்திய மலைகளின் மேற்கு சரிவு, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews