உயிரிழந்த ஊடகவியலாளருக்கு வவுனியாவில் அஞ்சலி!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும்,தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில்,அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவுரையினை வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews