இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று (30) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், வடக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவிற்கு வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இன்று (31) அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் நேற்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்தது.

இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews