கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கண்டனம்…..!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கஜேந்திரன் கைது தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவிக்கும் போது

தியாகி திலீபன் அவர்களுடைய. நினைவு நாளில் தொடர்ச்சியாக விளக்கேற்றி வருகிறார்கள், இந் நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றும் பாராது அவரது ஆடைகளை இழுத்த அவருக்கு அடித்து இழுத்த கைது செய்தமை கவலைக்குரிய விடயமும், வேதனைக்குரிய விடயமும் ஆகும். இது கண்டனத்திற்கு உரிய விடயம் என்றும், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலமை என்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றும் ஒரு, சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு இப்படி செய்ய முடியுமா என்றும் அந்த மோசமான செயலை தாம் கண்டிப்பதாகவும் அதுமட்டுமின்றி அதிகமாக தமிழ் மக்கள் இருக்கின்ற பகுதியில் சிங்கள போலீசாரை ஈடுபடுத்தி அவர்கள் தொடர்பாடல் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஏனேன்றால் கஜேந்திரன் தமிழில் சொல்கின்ற விடயங்களை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை என்றும் தெரிவித்தார்
வடமராட்சி ?

Recommended For You

About the Author: Editor Elukainews