யா.அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா….!

யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. முதல்  நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து அழைத்துவரப்பட்டு மக்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.  வரவேற்பு நடனம், வரவேற்பு உரை என்பன இடம் பெற்றததை தொடர்ந்து மாணவர்களின் நடன நிகழ்வுகள், பாடல், கவிதை, பேச்சு என்பன் இடம் பெற்றதை தொடர்ந்து பரிசளிப்பு இடம் பெற்றது.

பாரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன்,

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம அலுவலர் தோமஸ் ஜீட், கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.ரங்கேஸ்வரன்,

முன்னாள் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் வே.பரமேஸ்வரன், மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews