யாழில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பினால் எயிட்ஸ் தொற்றாளரும் அதிகரிக்கலாம்!வைத்தியநிபுணர்,

யாழில் போதை வஸ்து பாவனை அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்,

வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர்

வைத்தியர் ஏ ,ரொகான்

தெரிவித்தார்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளத்தின் ஊடாக போதை வஸ்து ஏற்றும்  பாவனை அதிகரித்து காணப்படுகின்றது

இப்பொழுது நாளத்தின் ஊடாக போதைவஸ்து   பாவனை ஏற்றுவோரின் எண்ணிக்கை அண்மைய நாட்களில்   அதிகரித்துக்கொண்டு வருகின்றது

ஏனெனில் இந்த வருடம்எயிட்ஸ் நோய் தொற்றுக்கு இலக்காகி இனங் காணப்பட்டவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக காணப்படுகிறார்கள்

எனவே இந்த நாளத்தின் ஊடாக போதை வஸ்து பாவனையாளர் எண்ணிக்கை  அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது ,சமூகத்தை வலுப்படுத்துவோம் எய்ட்ஸ் நோயை தடுப்போம் எனும் தொனிப் பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினமானது உலகளாவிய ரீதியில்  கொண்டாடப்படுகின்றது

உலக நிலவரப்படி 2022 ம் ஆண்டுவரை உலகத்தில் நாலு கோடி மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளார்கள்

இந்த எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர்கிட்டத்தட்ட  5  மில்லியன் பேர் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள் ஒவ்வொரு வருடமும்  1.5 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கு உள்ளாகி கண்டுபிடிக்கப்படுகின்றார்கள்

இலங்கையில் தற்போது வரை 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்றுவரைக்கும் எச்ஐவி தோற்றுள்ளவர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை கிட்டத்தட்ட 65 பேர்எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும்எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக கூடிக் கொண்டு போகின்றது கடந்த வருடம் 3 பேர் புதிதாக இனம் காணப்பட்டார்கள்

இந்த ஆண்டு நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ்ப்பாணபோதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகின்றது

குறிப்பாக இளவயதினரே  எயிட்ஸ்  நோய்த் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்படுகின்றார்கள் அதேபோல

தொற்றால் இனம் காணப்படுபவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றது

அதேபோல நோய்த்தொற்றுக்குள்ளாவோரின்  தகவல்கள் மிகவும் ரகசியமாக பேணப்படுகின்றது ,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஹோட்டல்ம் வர்த்தக நிலையங்களில் கடமை ஆற்றுவதற்கு இந்த ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றோம் எதிர்வரும் காலத்திலும் அபாயமான இடங்கள் என கருதப்படும் இடங்களிலும் இந்த இரத்த பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதை வஸ்து பாவனை அதிகரித்து காணப்படுகின்றது

இப்பொழுது நாளத்தின் ஊடாக போதைவஸ்து   பாவனை  அதிகரித்துக்கொண்டு வருகின்றது

ஏனெனில் இந்த வருடம் நோய் தொற்றுக்கு இலக்காகி இனங் காணப்பட்டவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக காணப்படுகிறார்கள்

எனவே இந்த நாளத்தின் ஊடாக போதை வஸ்து பாவனையாளர் எண்ணிக்கை  அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது

சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதனால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால் அது அங்குள்ள மற்றவருக்கும் தொற்றக்கக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது

எனவே நாளங்கள்  மூலமாக போதை வஸ்து ஏற்றுபவர்கள் நிச்சயமாக எயிட்ஸ் பரிசோதனை மேற்கொள்வது சிறந்ததாக காணப்படுகின்றது,

Recommended For You

About the Author: Editor Elukainews