இரகசியமாக நெடுந்தீவுக்கு சென்று திரும்பிய பாகிஸ்த்தான் துாதுவர்..!

யாழ்.தீவகம் நெடுந்தீவு பகுதிக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேயர் ஜெனரல் முகமட் சாட் கஹடாக் நேற்றய தினம் சென்றுள்ளதாக அறியக்கிடைத்தது.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8மணிக்கு நெடுந்தீவு பகுதிக்கு தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் குறித்த பகுதிகளை பார்வையிட்டு உள்ளார். ஏற்கெனவே மண்டைதீவு பகுதியில் பாகிஸ்தான்

சர்வதேச தரத்திலான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில் உயர்ஸ்தானிகர் இரகசியமான முறையில் நெடுந்தீவுக்கு விஜயம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Recommended For You

About the Author: Editor Elukainews