ஊர்காவற்துறையில் 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறை!

ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு தனது மகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அத்துடன் தனது மகளை துன்புறுத்தும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேசமயம் அச்சிறுமியும் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபருக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து நிதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews