மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தேசிய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் விசேட அடையாள அட்டையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும், அதேவேளை இந்த வருடத்தில் அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்றார்.அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.ஆணையம் இந்த ஆண்டு முன்னோடித் திட்டமாக 5,000 அடையாள அட்டைகளை வழங்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews