உலக கிண்ணப் போட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ஓட்டங்கள் இலக்கு

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணியின் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

இதன்படி, தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 327 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 37 ஆவது போட்டியில் சம பலம் கொண்ட அணிகளாக விளங்கும் தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதவுள்ளன.

குறித்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (05.11.2023) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி பங்கேற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அத்துடன், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews