வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவேவிவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்று யாழ்ப்பாண
மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்ற விவசாய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்படி கோரிக்கையினை முன் வைத்தார்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் அதில் முக்கியமாக இந்த ஏற்றுமதிக்கான தரச் சான்றிதழ் பெறுவதில் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றார்கள் அந்த தர சான்றிதழை பெறுவதற்காக நீண்ட தூரம் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்டு தங்களுடைய தரச் சான்றிதழை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே அதனை இலகுபடுத்தி இலகுவான முறையில் தங்களுடைய ஏற்றுமதி தர சான்றிதழ் பெறுவதற்கு ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அவ்வாறு விற்பனை செய்யப்படும் போது அந்த பொருட்களுக்கான விலை நிர்ணயத்தினையும் கருத்தில் கொள்ளுமாறும்,கோரிக்கை விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews