சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் அனைத்தும் இடமாற்றம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை (16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
மருத்துவக் கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் அனைவரும் விக்ரோரியா வீதியில் புதிதாகத் திறப்பட்டுள்ள நுழைவாயிலூடாக
( இல.9 B) வருகை தந்து வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற முடியும்.
அதேவேளை இதய சிகிச்சை கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் விக்ரோரியா வீதியில் உள்ள வைத்தியசாலையின் 11 ஆம் இலக்க நுழைவாயிலூடாக வருகைதந்து இதய சிகிச்சை கிளினிக்கிற்குச் செல்ல முடியும். இது இதய சிகிச்சை விடுதிக்கு பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறும் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews