தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் : 209 பரீட்சை மண்டபங்கள் – மாகாண பணிப்பாளர் குயின்ரஸ்

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக் கல்விப் பணிப்பளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தரம் 5இற்கான பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண  சார்பில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயல்படவுள்ளது.
இதேநேரம் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும மாணவர்களில் யாழ்ப்பாணம் ஒன்று வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 782 மாணவர்கள் பராட்சைக்குத் தோற்றும் அதேநேரம் யாழ்ப்பாணம் 02 வலயத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 54 பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 208 மாணவர்கள் பராட்சைக்குத் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2ஆயிரத்து 219 மாணவர்களும், முல்லைத்தீவில் 09 இணைப்பு நிலையங்களின் கீழ் 24 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 162 மாணவர்களும்,
வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதேநேரம் மன்னாரில் 16
இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 176 மாணவர்கள் தோற்றுகின்றனர் .
ஆகவே பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு வாழ்த்துகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews