தடைகளை மீறி யாழ்ப்பாணம் இந்துவில் இரத்த தான நிகழ்வு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று 23.09.2023 சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது.
 இவ் இரதத்ததான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில் இன்றைய இரத்ததான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்  கல்வி அமைச்சினால் கல்லூரி வளாகத்துக்குள் இரத்ததான நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்துவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே கல்லூரி முன்றலில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் இரத்த தான நிகழ்வு நடைபெற்றது. 

Recommended For You

About the Author: Editor Elukainews