கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பு….!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தின் பாவனைக்காக யாழ்ப்பாண மருத்துவ பீட கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம், யாழ்ப்பாண மருத்துவ பீட கடல் கடந்த பழைய மாணவர் அமைப்பின் ( Jaffna Medical Faculty Overseas Alumni – Canada) கனடா கிளைத் தலைவர் மருத்துவர் மயில்வாகனம் மயிலாசன் கையளித்தார். இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன், பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews