சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய தற்போது வரையறை விதிக்கப்பட்டுள்ள சில துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்க கோவிட் செயலணிக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கோவிட் செயலணிக்குழு கூட்டம் நடத்த போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பெறும் அரச நிறுவனங்களை பகுதி பகுதியாக திறப்பது, நிர்மாணத்துறையின் ஊழியர்களை அழைத்து வர அனுமதி வழங்குவது, கிராமங்களில் உள்ள சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகங்களை ஆரம்பிப்பது, முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி வழங்குவது ஆகியன இந்த கோரிக்கைகளாகும்.
இதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் சுகாதார துறையினர் இவற்றை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதேவேளை நாடு முழுவதும் அனைத்து பிரதேசங்களுக்கும் அத்தியவசிய உணவு பொருட்கள் தினமும் கிடைக்கும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் பொறுப்பு அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரதேசங்களிலும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை பொலிஸ் நிலையங்கள் ஊடாக தினமும் பெற்று, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி இதன் போது பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்தியவசியமற்ற நபர்கள வீதிகளில் பயணிப்பதை தடுத்து நிறுத்துமாறும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.