கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும்.

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும்  23.08.2023 அன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும், கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் அன்றைய தினம்(23) புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
உள்ளூர் உற்பத்தியை, உற்பத்தியாளர்களின் சுயதொழிலினை மேம்படுத்துவதனூடாக, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்ததுவதனை நோக்காகக்  கொண்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்போது எமது பாரம்பரிய நஞ்சற்ற உணவு வகைகளை காட்சிப்படுத்தும் முகமாக சுமார்  28 விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படுள்ளன. இன் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரூபவதிகேதீஸ்வரன் மற்றும் மேலதிக  அரசாங்க அதிபர் உள்ளிட்ட  பலரும் கலந்துகொண்டன

Recommended For You

About the Author: Editor Elukainews