வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனாத் தொற்றால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 5 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நேரியகுளம், செட்டிகுளம், சின்னபுதுக்குளம், கணேசபுரம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கொரோனாத் தொற்றால் மரணித்தவர்களாவார்கள்

இந்நிலையில் மரணித்த 5 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews