150 மதுபான போத்தல்களுடன் கைதான நபர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு –

பொகவந்தலாவை கெம்பியன் பிரிவில், 150 மதுபான போத்தல்களுடன் கைதான நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

175 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர், தோட்டப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களைக் கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews