குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் நேற்றை முன்தினம் (13) உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் காணி ஒன்றினை துப்பரவு செய்துகொண்டிருந்தவேளை குளவி கொட்டுக்கு இலக்காகி இறந்துள்ளார்.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த நடராசா சந்திரமோகன் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews