சரவணபவன் அலுவலகத்திலும் செஞ்சோலை நினைவேந்தல்….!

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலானது, இன்று காலை 11.15 மணியளவில், தமிழரசுகட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்பொழுது உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் 2006.08.14 அன்று தலைமைத்துவ  பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து சிறீலங்கா வான்டையின் கிபிர் விமானம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும்  பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews