அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்று சாதனை…!(video)

மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில்  எல்லே விளையாட்டில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.
மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான  போட்டிகள் நேற்று  12;08/2023 ஆரம்பமாகிய நிலையில் இன்றை தினம்   மன்னார் சென்சேவியர் பாடசாலை அணிக்கும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை அணிக்கும் இடையில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் 40 பந்துகளில் 8 ஓட்டங்களை மன்னார் சென் சேவியர் பாடசாலை அணி பெற்றுள்ளது. அதனை  எதிர்த்து விளையாடிய
யா/ அம்மன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை  அணி
40 பந்தில் 9 ஓட்டங்களைப் பெற்று வடக்குமாகாண எல்லே லோட்டிக்கான கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

வரலாற்றில் முதல் தடவையாக  யா/ அம்மன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை  மாகாண மட்டத்தில் இவ்வாறு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டமை  இதுவே முதல் தடவையாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews