பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா….!

பொற்பதி  மக்கள் நலன்புரி சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம் 12/08/2023 மிக மிக சிறப்பாக இடம் பெற்றது .
அதன் தலைவர்  ஏ. ஜே அசோக்  தலைமையிடம்  பெற்ற இந் நிகழ்வின்   முதன் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியில் இருந்து விழா  மண்டபம் வரை மாலை அணிவிக்கப்பட்டு  அழைத்துவரப்பட்டு  அங்கு வரவேற்பு நடனம்,   மங்கல விளக்கேற்றல் என்பன இடம் பெற்றன.
 மங்கல விளக்கினை  அமெரிக்கன் சிலோன் மிசன்  திருச்சபை போதகர்  டேவிட் நிலுக்சிகன் குடத்தனை கரையூர்  அ.மி.த.க.  பாடசாலை அதிபர் கதிர்காமலிங்கம்,  முன்னாள் பருத்தித்துறை  பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார்,  இளைஞர் சேவை உத்தியோகத்தர்  அம்பான் நிதர்சன்,   குடத்தினை வடக்கு கிராம சேவையாளர் திருமதி தனுசியா,   இலங்கை செஞ்சிலுவைச் சங்க  தலைவர்  சங்கரப்பிள்ளை திரவியராசா  உட்பட பலரும்  ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து  தலைமை உரையினை  மக்கள் நலன்புரிச் சங்கத்தின்  துணை தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து பொற்பதி ரோமன் கத்தோலிக்க பாடசாலையில்  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய  மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன்,  தெரிவு செய்யப்பட்ட  10 குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கும்  ரூபா 4000/-  பெறுமதியான உணவுப்பொருளும் உயர் கல்வி கற்பதற்காக இரண்டு மாணவர்களுக்கு  தலா இருபதாயிரம் ரூபாய் உதவிகளும்,   வாழ்வாதார மேம்பாட்டுக்காக ரூபா முப்பதாயிரம் பெறுமதியான இரண்டு பேருக்கான காசோலைகள் உட்பட பல லட்சம் பெறுமதிதான  உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
  இதே வேளை பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்துடன் தொடர்ந்து 5 ஆண்டுகள் அதன் வளற்சிக்காக பங்காற்றிய சமூக சேவையாளர் வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் ஆகியோர் மக்கள் நலன்புரி சங்கத்தால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில்  சமூக சேவையாளர்  வேந்தன்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார்,   இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் சங்கரப்பிள்ளை திரவியராசா,   குடத்தனை வடக்கு அ.மி.த.க பாடசாலை  அதிபர்  கதிரதகாமலிங்கம்,   பொறதபதி  ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியை  திருமதி உதயா , குடத்தனை வடக்கு கிராம உத்தியோகத்தர்  தனுஷியா,  இளைஞர் சேவை உத்தியோகத்தர் அம்பன்  நிதர்ஷன்,   அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை   போதகர் டேவிட் நிலுக்சிகன்    உட்பட பலரும் கலந்து கொண்டு  மாணவர்கள் கௌரவிப்பு, வாழ்வாதார உதவிகள், கல்விக்கான உதவிகள், உட்பட பல்வேறு உதவிகளையும் வழங்கி வைத்தனர்.
இதேவேளை  பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை  கொண்டாடும் முகமாக  நலம்புரிச் சங்கத்தினுடைய உறுப்பினர்கள்,  மற்றும் விருந்தினர்கள்  இணைந்து  கேக் வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews