இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், www.doendts.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews